தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 157 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது.
ALSO READ | TN Election Results: ஆச்சர்யங்களை அள்ளி தந்துள்ள தமிழக தேர்தல்
இதில், அதிமுகவின் அமைச்சர்கள் பல பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் 72195 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 68, 737 வாக்குகள் பெற்றுள்ளார். 3458 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வெற்றி நடைபோடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றி நிச்சயம், கடமை, கண்ணியம் காப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ALSO READ | Election 2021: அசாமில் ஆளும் கட்சியே சிம்மாசனத்தை கைப்பற்றுகிறது CM Sonowal
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR