Corona Update ஜூலை 22: மாவட்டவாரியாக தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில். அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 180 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 137 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2021, 08:46 PM IST
Corona Update ஜூலை 22: மாவட்டவாரியாக தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு  title=

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால்  (TN Covid Update) 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பலி எண்ணிக்கை 29. 

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,43,040 ஆக அதிகரித்துள்ளது. கோவிட் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் (Corona Death in Tamil Nadu) மொத்த எண்ணிக்கை 33,808 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில். அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 180 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 137 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 133 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 

Also Read | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?

மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள தீவிரமான நோய்க்கட்டுப்பாடு நடவடிக்கைகளினால் தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே பொதுஇடங்களுக்கு செல்வது, முகக்கவசத்தை கட்டாயமாக அதுவும் முறையாக அணிவது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்கலாம்.

நமது ஆரோக்கியமும், வாழ்க்கையும் நமது கையில் தான் இருக்கிறது. இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்த்தொற்று ஒருவருக்கு வந்தால், அது பலருக்கு பரவும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். நாம் கவனமாக இருந்தால், கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கலாம்.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:

கோயம்புத்தூர் - 180

ஈரோடு - 137

சென்னை - 133

சேலம் - 113

தஞ்சாவூர் -102

Also Read | COVID-19 Update ஜூலை 21: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1891

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூர் 23
செங்கல்பட்டு 98
சென்னை 133
கோவை 180
கடலூர் 74
தர்மபுரி 40
திண்டுக்கல் 20
ஈரோடு 137
கள்ளக்குறிச்சி 43
காஞ்சீபுரம் 41
கன்னியாகுமரி 43
கரூர் 14
கிருஷ்ணகிரி 22
மதுரை 28
மயிலாடுதுறை 24
நாகப்பட்டினம் 32
நாமக்கல் 52
நீலகிரி 60
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 31
ராமநாதபுரம் 11
ராணிப்பேட்டை 25
சேலம் 113
சிவகங்கை 19
தென்காசி 10
தஞ்சாவூர் 102
தேனி 12
திருப்பத்தூர் 29
திருவள்ளூர் 61
திருவண்ணாமலை 60
திருவாரூர் 27
தூத்துக்குடி 17
திருநெல்வேலி 30
திருப்பூர் 94
திருச்சி 68
வேலூர் 37
விழுப்புரம் 38
விருதுநகர் 15

Also Read | ஜூலை 22: இன்று தமிழகத்தில் 1872 பேருக்கு கொரோனா பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News