உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ள முதல்வர், இதுவே வரலாறு நமக்கு சொல்லும் பாடமாகவும் உள்ளது என்றார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2021, 11:35 AM IST
உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்  title=

சென்னை: விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்தார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வரவேற்பதாகவும், இதனால் மகிழ்ச்சியடைவதாகவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் (MK Stalin) அவர்கள் கூறியுள்ளார். பிரதமரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், இது முமுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். 

மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ள முதல்வர், இதுவே வரலாறு நமக்கு சொல்லும் பாடமாகவும் உள்ளது என்றார். 

வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் பெருமை கொள்வதாவதாகவும் முதல்வர் முக. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ALSO READ: Farm Laws: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு 

முன்னதாக, இன்று நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி (PM Modi), 2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே அரசு நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் சிறு விவசாயிகள் என குறிப்பிட்ட அவர், விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

இதற்கிடையில், மூன்று வேளாண் சட்டங்கள் (Farm Laws) ரத்து செய்யப்பட்டதை நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 39 வது நாளாக நடைபெற்று வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், மத்திய அரசு வேளாண் விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில்  தேங்கிநிற்கும் நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும், கன மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணத் தொகை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:நவம்பர் 29: விவசாயிகளின் போராட்டத்தின் முதலாண்டு நிறைவு; நாடாளுமன்றத்திற்கு பேரணி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News