சென்னை: பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா என நான்கு மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம். அதில் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமையத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் - தேசிய பசுமையத் தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என தனது ட்விட்டர் பகக்த்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் - #NGT வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/IFh3DXwukj
— M.K.Stalin (@mkstalin) October 15, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR