TN Budget 2024 Highlights Schemes for Women Development: 2024-2025 நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, இன்று சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பட்ஜெட் 2024:
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அன்றைய நாளில் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையினை முழுவதுமாக வாசித்தார். இது குறித்து அமைச்சர்கள் மற்றும் மக்களிடையே சலசலப்பு எழுந்த நிலையில், இன்று (பிப்., 19) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான கல்வி கடன்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கான கடன்கள் என மாநில வளர்ச்சி திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மகளிருக்கான பல சிறப்பம்ச திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்கள்:
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை உள்பட பெண்களுக்கான நலத்திட்டங்கள் பல இடம் பெற்றிருந்தன. அந்த திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தோழி விடுதிகள்:
வெளியூரில் இருந்து தங்கி படிக்கும்/வேலைக்கு செல்லும் பெண்களுக்காக தோழி விடுதிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, இந்த திட்டத்திற்காக ரூ.26 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்டமாவட்டங்களில் 26 கோடி மதிப்பீட்டில் மூன்று தோழி விடுதிகள் கட்டப்படும் என இன்றைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பேருந்து:
2021 ஆம் ஆண்டு மகளிர், இலவசமாக பயணம் செய்யும் வகையில் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் தற்போது ரூ.3,050 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வெளியாகியுள்ள சூப்பர் அறிவிப்புகள்!
மகளிர் உரிமைத்தொகை:
பெண்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு அமல்படுத்திய திட்டங்களுள் ஒன்று, ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம்’. தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்திற்காக இன்றைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில், ரூ.13,720 கோடி மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்:
மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கவும் தமிழக அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, ரூ.35 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிருக்கு கடன் உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
புதுமைப்பெண் திட்டம்:
கடந்த 2021ஆம் ஆண்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்உ கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2024: குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ