TN Assembly: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 04:03 PM IST
TN Assembly: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு title=

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் (TN Elections 2021) முந்தைய ஆளும் கட்சியான அதிமுக (AIADMK) தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததது. 2016 ஆண்டு நடந்த தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது நடந்த தேர்தலில் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டப்பேரவை தேர்தலில், 125 இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மை பெற்ற திமுக (DMK) ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் அதிமுக (AIADMK) எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3வது முறையாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

ALSO READ | சென்னையில் அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம்

இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி, கொறடா பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவின் சட்டசபை கொறடாவாக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை கொறடாவாக அரக்கோணம் சு. ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி. அன்பழகன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 இதற்கிடையில் இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ | ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News