காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க., ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்க ம.ந.கூ., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே பா.ஜ., மற்றும் ம.ந.கூ., அறிவித்தன.
காவிரி விவகாரம் பற்றி விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க., ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:- இது தி.மு.க.,வின் கூட்டமல்ல, தமிழர்களின் உரிமைக்காக நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டம் ஆகும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. எனவே திமுக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. தமிழக அரசோ அல்லது வேறு எந்த கட்சியோ கூட இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் நிச்சயமாக அந்த கூட்டத்தில் நிச்சியமாக திமுக பங்கேற்றிருக்கும் என்றார். தி.மு.க., மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளன. ஆனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்கின்றன.
மேலும் கடந்த 5 ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒரு போகம் மட்டுமே நடைபெற்று வந்த விவசாயத்திற்கும் தற்போது அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது என தனது வேதனையை தெரிவித்தார். தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் தங்கள் உயிரை பணயம் நிலை ஏற்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். கூட்டத்தின் இறுதியில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு அரசு வழங்க வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்து கட்சி சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தள்ளிப் போடும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
காவிரிப் பிரச்சினை குறித்து இன்று நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சிகள்,விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்றேன் #CauveryIssue pic.twitter.com/7cTYEuq8SX
— M.K.Stalin (@mkstalin) October 25, 2016