அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அனைத்து அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 09:15 AM IST
அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு title=

பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கருணாநிதி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது கருணாநிதி, திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்து அரசு பேருந்துகளிலும் இடம் பெற வேண்டும் என்றும் திருவள்ளுவரின் படமும் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து மாநகர, தொலைதூர அரசு பேருந்துகளில் (Government Bus) திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்கள் (Tirukkural) இடம் பெற்ற வந்தது. அதன்படி பேருந்துகளில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் வைக்கப்பட்டன.

ALSO READ | TN NEET update: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம்

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு பேருந்துகளில் திருவள்ளுவர் படம் இல்லாமல் சில பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தை பராமரிக்காததால் மங்கலாக இருப்பதும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் அவர் உடனடியாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று அமைச்சர் ராஜகண்ணப்பனை அழைத்து மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தற்போது இது குறித்து மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்., அதன்படி அனைத்து போக்குவரத்து கழக பஸ்களிலும் திருவள்ளுவர் படம், திருக்குறள், மற்றும் அந்த குறளுக்கான விளக்கவுரையும் பயணிகள் பார்வையில் எளிதில் தென்படும் வகையில் இடம் பெற வேண்டும் என்றும் எந்த குறள் இடம் பெற வேண்டும் என்பதை நான் தேர்வு செய்து தருகிறேன்’ என்று அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதன் மூலம் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பஸ்களை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ | TN Assembly முதல் கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News