ஆவின் தொழிற்சாலையில் சோகம்! ஷால் சிக்கியதால் இளம் பெண்ணின் தலை துண்டானது

Thiruvallur Aavin Factory Accident: திருவள்ளூரில் ஆவின் தொழிற்சாலையில், இயந்திரத்தில் ஷால் சிக்கியதால் இளம் பெண் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Last Updated : Aug 21, 2024, 07:07 AM IST
  • திருவள்ளூர் ஆவின் தொழிற்சாலை விபத்து
  • இளம் பெண் தலை துண்டாகி உயிரிழப்பு
  • இயந்திரத்தில் ஷால் சிக்கியதால் நடந்த கோரம்
ஆவின் தொழிற்சாலையில் சோகம்! ஷால் சிக்கியதால் இளம் பெண்ணின் தலை துண்டானது title=

Thiruvallur Aavin Factory Accident: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்20) வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி(30) என்பவர் ஈடுபட்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக உமாராணியின் முடியானது இயந்திரம் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. கணப்பொழுதில் உமா மகேஸ்வரியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துண்டாது. இந்த கோர விபத்து ஆவின் தொழிற்சாலைக்குள் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் உருவாக்கியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | 'ஸ்டாலின் யாருனு தெரியாது... விஜய்யை தெரியும்' சென்னையில் மனு பாக்கர் சொன்ன பதில்!

இதனடிப்படையில், தகவல் அறிந்து டிஎஸ்பி கந்தன் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆவின் தொழிற்சாலையில் உயிரிழந்த உமாராணி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 

காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது. விபத்தினால் ஆவின் பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எதிர்பாராத விபத்தில் இளம் பெண் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரஜினி பட இயக்குநரின் மனைவிக்கு தொடர்பு...? - பரபரப்பு தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News