கை விலங்கோடு தப்பிச்சென்ற திருட்டு வழக்கு குற்றவாளி

திருப்பத்தூரில் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர், கைது செய்ய வந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2021, 09:39 PM IST
கை விலங்கோடு தப்பிச்சென்ற திருட்டு வழக்கு குற்றவாளி title=

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிமன்ற தலைவராக சுவேதா என்பவர் இருக்கிறார். அவருடைய கணவர் கணேசன் மீது கோயம்புத்தூர் காவல்நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் கோவைப் பகுதியில் தனியாக இருந்த மூதாட்டி வீட்டுக்கு சென்ற அவர், மாநகராட்சி அதிகாரிகள்போல் நடித்து தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

ALSO READ | தேமுதிகவின் 8 முக்கிய கோரிக்கைகள் - கவனிக்குமா தமிழக அரசு?

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த வழக்கில் கணேசனுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், அவரை கைது செய்ய துத்திப்பட்டுக்கு விரைந்துள்ளனர். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவர் தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் மாலை அணிவிக்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த தலைமைக் குற்றப்பிரிவு காவலர்கள் ராஜா முகமது மற்றும் வடிவேல் ஆகியோர் நொடிப்பொழுதில் கணேசனை சுற்றிவளைத்து கையில் விலங்கு மாட்டியுள்ளனர். 

இதனை எதிர்பாராத அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தநேரத்தில் அவரை சுற்றியிருந்த ஆதரவாளர்கள் திடீரென காவலர்களை தாக்கி, கணேசனை தப்பிக்க வைத்துள்ளனர். காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருபத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் கணேசனை தேடி வருகின்றனர். ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் ஒருவர், திருட்டு வழக்கில் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | PUBG GAME: பப்ஜி மதனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News