வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Jul 1, 2018, 03:45 PM IST
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு! title=

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது! 

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..! 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், கடலில் சுமார் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுருத்தியுள்ளது!

 

Trending News