கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவிழும் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அணைகள் அனைத்தும் நிறைந்து வருகிறது.
இந்நிலையில், கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணிகளின் நீர்மட்டம் முளுகொள்ளலவை எட்டியுள்ள நிலையில் தற்போது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 80,000 கன அடியில் இருந்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தருமபுரி ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 8 ஆவது நாளாக தடை விதிப்பு!