கஜா புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு முழுவதுமாக ஆய்வு செய்யவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதயைடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதையடுத்த், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், மத்திய அரசு போதுமான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை. எதிர்த்து கேள்விகேட்க முடியாமல் பதவிகளை காப்பாற்றிகொள்ளும் நிலையிலேயே அதிமுக அரசு செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசானையின் படி, 2 ஆண்டுகள் காலமுறை ஊதியத்தின்படி பணியாற்றிய மாற்று திறனாளிகள் பணி நிரந்தரம் செய்யபட வேண்டும். ஆனால், தற்போது வரை ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு அதனை செய்யவில்லை. இதனால் 5000 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதற்கு முதலில் சமூக நலத்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிலை அமைப்பதற்கு 3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு நிதி அளிக்காதது வேதனைக்குறியது. இந்த பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் திமுகவினர் குரல் எழுப்புவோம் என்றும் கனிமொழி கூறினார்.
கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டபடுவது மட்டுமல்ல உலக நாடுகளின் கழிவுகள் இந்தியாவில் தான் கொட்டபடுகிறது என்று கனிமொழி கூறினார்.