திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த காளம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரும் இவரது மனைவி மணினீமேகர் ஆகிய இருவரும் அவிநாசி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த தனது மனைவிக்கு செல்ஃபோன் மூலம் அழைப்பு விடுத்த சந்தோஷ், தன்னுடன் பணியாற்றும் நன்பர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வீட்டில் விட்டுவிட்டு வருவதாக கூறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கணவரை காணாததால் அதிர்ச்சியடைந்த மணினீமேகருக்கு, அதிகாலை 2.30 மணி அளவிர் புதிய செல்ஃபோன் நம்பரில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள் சிலர், சந்தோஷ் உயிருடன் வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் எனக்கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன மணினீமேகர் தன்னிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கடத்தல் கும்பலின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் படிக்க | பைக்கை திருட வந்த வாலிபர் கிணற்றில் விழுந்து பலி!
மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்த கடத்தல் கும்பல் 2 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் உன்னையும், உன் கணவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணினீமேகர், பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் கடத்தல் கும்பலின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர்கள் தேனியில் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக தேனி சென்ற பெருமாநல்லூர் தனிப்படை போலீசார் அங்கு விடுதியில் தங்கியிருந்த கடத்தல்காரர்களிடம் இருந்து காயங்களுடன் இருந்த சந்தோசை மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட தினேஷ்குமார், முத்துக்குமார், சரவணன், உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க | கோவையில் சீனியரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR