தேர்தல் முடிவுகள் BJP செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது: ரஜினி

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.....

Last Updated : Dec 11, 2018, 07:19 PM IST
தேர்தல் முடிவுகள் BJP செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது: ரஜினி title=

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.....

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேசிய ரஜினி, தேர்தலில் BJP-க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சி புரிந்து வந்த மாநிலத்திலேயே வெற்றி பெற தவறி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். 

அப்போது, "பா.ஜ.க செல்வாக்கை இழந்துள்ளதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News