மே 23 காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தேர்தல் ஆணையர்

மே 23 ஆம் தேதி காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2019, 08:37 PM IST
மே 23 காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தேர்தல் ஆணையர் title=

சென்னை: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் நாள் நடைப்பெற்றது. அன்றே 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மேலும் கடந்த மே 19 ஆம் தேதி மீதமுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. 

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹூ, மே 23 ஆம் தேதி காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அது நிறைவந்தவுடன் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படும் எனக் கூறியுள்ளார். 

Trending News