காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்!!

காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு சேலம் ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தல்!!

Last Updated : Jul 22, 2018, 03:49 PM IST
காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்!! title=

காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு சேலம் ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தல்!!

காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆணை கிடு கிடு என நிறைந்து வருகிறது. இதையடுத்து, மேட்டூர் அணையில் வெள்ளஅபாய எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.  

இந்நிலையில், மேட்டூரை அடுத்த ரெட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் விடுமுறை நாள் என்பதால் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றில் குளிக்க அவர்கள் உறவினர்களுடன் சென்றனர். 
 
அப்போது, ஹரிகரன் என்பவர் நீரில் மூழ்கியதால், அவரைக் காப்பாற்ற தந்தை சீனிவாசன் மற்றும் தாய் மைதிலி உள்ளிட்டோர் முயற்சி எடுத்தனர். ஆனால் எதிர்பாரதவிதமாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவிரியில் ஐந்து பேர் நிகழ்வை தொடர்ந்து மேலும் மாவட்ட ஆட்சியர் ரோகினி மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

காவிரிக்கரை அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குளிக்க செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையடுத்து, தற்போது காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் 2 பேர் வாணிஸ்ரீ, மைதிலி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

 

Trending News