திமுக அளித்த வாக்குறிதியின்படி, தமிழகம் முழுவதும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றதில் இருந்தே அதிரடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி கோயில் (Tamil Nadu Temples) சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு (P K Sekar Babu) அறிவித்திருந்தார். கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. இதையடுத்து, சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் கோயில் ஆக்கிரமிப்பு ஒவ்வொன்றாக நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
ALSO READ | Women Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு
இதற்கு பிறகு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு முன்னதாக கூறியிருந்தார். இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அதன்படி இன்று முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது
அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள குருக்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதாகைகளில் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் பக்தர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
ALSO READ | புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR