தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் ONE AMONG AND AMONGST THE PEOPLE என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் நக்கீரன் ஆசிரியர் கோபால், துக்ளக் ஆசிரியர் ரமேஷ், ராஜ் தொலைக்காட்சி ஆசிரியர் மகேந்திரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வன், ராம்குமார் (நடிகரும் சிவாஜி மகன்) மற்றும் ஊடகத் துரையை சார்ந்த முக்கிய ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
முதலில் புத்தகத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரின் கணவர் சௌந்தரராஜன் வெளியிட்டனர். அதை நக்கீரன் கோபால் பெற்றூக் கொண்டார். இரண்டாவது புத்தகத்தை நடிகர் ராம்குமார் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பத்திரிக்கை துறையின் ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது
அனைவரும் மேடையில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை வாழ்த்தி பேசினர். அதன்பின் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் :-
அனைத்து ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் கேமராக்கள் நிறைந்து இருக்கிறதை பார்க்கும்பொழுது நான் ஒரு பாக்கியசாலி எனக் கருதுகிறேன். நான் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை அன்பை தான் பயன்படுத்துகிறேன்
தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வலம் வந்து இன்று இரண்டு மாநிலங்களில் ஆளுனராக இருக்கும் நிலையில், இந்த பதவியோ அடிப்படையில் எளிமையாக அனைவரும் அணுக வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என நான் உறுதி கொண்டேன். நாம் நம் வேலையை செய்ய வேண்டும் அதுமட்டுமில்லாமல் அனைவரையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.
மேலும் படிக்க | ஓசூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம்: தமிழக அரசு தகவல்
அரசியல்வாதி இருக்கும்பொழுது விமர்சனங்களை பார்த்தேன். தற்போது ஆளுநராக இருக்கும்போதுகூட விமர்சனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில இடத்திற்கு செல்லும் பொழுது நம்மை தாக்கி கொண்டு இருக்கிறார்கள். எப்பொழுதும் மக்களோடு மக்களாகவே குடி மக்களின் மனதில் இருக்கக்கூடிய பதவியில் இருக்க வேண்டும்
தெலுங்கானாவில் அந்த முதலமைச்சரிடம் பணியாற்றுவது சவாலான காரியம்
என் தாய்த் தமிழில் என்னை பதவியேற்க வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் ஆளுநர் உரையையும் தமிழிலேயே உரையாற்றியது மிக மகிழ்ச்சியையும் கடவுளுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
என்னைவிட வலிமையான பெண் ஆளுநர் இங்கே இருக்க முடியாது பெண்கள் என்றால் எதையும் சாதிக்க முடியும்
என் பலமே என் உழைப்பும் என் பணியும் தான்
புதுச்சேரி முதல்வர் வேறு மாதிரி தெலுங்கானா முதலமைச்சர் வேற மாதிரி என இரண்டு மாநிலங்கள் முதல்வர்களுடன் கிடைத்த அனுபவம் மற்றும் சவால்களையும் நான் பார்த்து தற்போது எந்த மாநிலங்களில் வேண்டுமானாலும் நான் பணி செய்ய தயாராக உள்ளேன்.
என் தாய் தமிழகத்திற்கு சேவை செய்வதுதான் என் முதற்கண் ஆசையாக எனக்கு இருக்கும். அழைப்பு ஒன்று வந்தால் அதை அன்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் அதை அரசியலாக பார்க்காதீர்கள்.
மேலும் படிக்க | சர்ச்சைக்குள்ளான இளையராஜா: தங்கர்பச்சானின் கேள்வியும் தாஜ்நூரின் பதிலடியும்
எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தாலும் செவிசாய்த்து செய்யும் பொழுது ஆளுநரின் அழைப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.
அரசியல் வேற்றுமைகள் இருக்கலாம் அனைவரும் மகிழ்ச்சியோடு அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். தமிழ் பண்பாடு எதை சொல்லி இருக்கிறது அதை பின்பற்ற வேண்டும்
ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்படுவதற்கு புதுச்சேரி ஒரு உதாரணம்.
ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்படாமல் இருப்பதற்கு உதாரணம் தெலுங்கானா.
எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சர்வாதிகாரியாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | எருமை மாடும்தான் கருப்பு அதுக்காக அது திராவிடரா? சீமான் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR