ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 1 முடிவுகள் வெளியீடு www.trb.tn.nic.in

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாள் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2019, 08:33 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 1 முடிவுகள் வெளியீடு www.trb.tn.nic.in title=

ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

கடந்த ஜூன் 8 ஆம் தேதி முதல்தாளும், இரண்டாம் தாள் ஜூன் 9 ஆம் தேதியும் நடைபெற்றன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

இன்று முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Trending News