தமிழரின் வேண்டுகோள் ஏற்று தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம்!

தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது! 

Last Updated : Feb 3, 2018, 10:26 PM IST
தமிழரின் வேண்டுகோள் ஏற்று தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம்! title=

தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது! 

தலைநகர் டெல்லியில், ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக தனி இல்லம் அமைப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழகத்திற்கு "தமிழ்நாடு இல்லம்" அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (வெள்ளி) தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழ்நாடு இல்லத்திற்கு பழைய இல்லத்திற்கு - வைகை இல்லம் என்றும், புதிய இல்லத்திற்கு பொதிகை இல்லம் எனவும் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதனையடுத்து இதற்கு எதிர்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக இல்லத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பழைய இல்லத்திற்கு - வைகை தமிழ்நாடு இல்லம் என்றும், புதிய இல்லத்திற்கு பொதிகை தமிழ்நாடு இல்லம் எனவும் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

Trending News