Tamilnadu government: கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2020, 11:03 AM IST
  • தமிழகத்தில் டிசம்பர் 31 நள்ளிரவு வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும்
  • வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் தொடர்ந்து அமலில் இருக்கும்
  • சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது
Tamilnadu government: கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் title=

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளார். அவை:

  • தமிழகத்தில் (Tamil Nadu) டிசம்பர் 31 நள்ளிரவு வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும்
  • வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் (E-pass) தொடர்ந்து அமலில் இருக்கும்
  • சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது
  • மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர வேறெங்கும் விமான போக்குவரத்து (Air transport) தொடங்கப்படாது

தொடர்புடைய செய்தி | கொரோனாவை தவிர 2020-ல் நாம் அதிகம் பயம்படுத்திய வார்த்தை எது தெரியுமா?

  • மருத்துவக் கல்லூரிகள், மருத்தவம் சார்ந்த கல்லூரிகள் (Colleges) டிசம்பர் 7 முதல் இயங்க அனுமதி
  • கலை, இலக்கியம், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்படும்
  • முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி
  • பொருட்காட்சி அரங்கங்களில் வர்த்தகர்களுக்கு இடையிலான செயல்பாட்டிற்கு மட்டும் அனுமதி 
  • உள் அரங்களில் 200 பேர் பங்கேற்கும் சமுதாய மறும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி, அதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறவேண்டும்
  • பொதுஇடங்களில் செல்பவர்கள் கட்டாயம்  முகக்கவசம் (Face Masks) அணியவேண்டும்
  • நோய்த் தொற்று நிலைக்கு ஏற்ப டிசம்பர் 14  முதல் சென்னை மெரினா (Chennai Marina) கடற்கரைக்கு வர அனுமதி
  • முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படலாம். 
  • கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும்

தொடர்புடைய செய்தி | லாக்டவுன் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு, 12 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News