சமாளிக்க தயாராக இருங்கள் - கனமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில் அதனை சமாளிக்க தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 19, 2022, 07:09 PM IST
  • கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
  • அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை
சமாளிக்க தயாராக இருங்கள் - கனமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு title=

இதுதொடர்பாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான, நிலையான இயக்க நடைமுறைகளை மேற்கொள்ளவும், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாக இயந்திரத்தையும் துரிதப்படுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மேலும், கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த  24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழ்நாடு - புதுச்சேரி  மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

அதேபோல் 21ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy Rain

22ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும், 23ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க | 7 பேர் விடுதலை... மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News