சேலத்தில் சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் EPS!

வாழப்பாடியில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர்  பழனிசாமி!!

Last Updated : Feb 9, 2020, 10:52 AM IST
    1. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள்.
    2. சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.
    3. இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
சேலத்தில் சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் EPS! title=

வாழப்பாடியில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர்  பழனிசாமி!!

சேலம்: புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட இளைஞர்களும் கருவேப்பிலைபட்டி வந்து கிரிக்கெட் பயிற்சி பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் BCCI முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். 

கிரிக்கெட் மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் டிராவிட் பேசுகையில்... "சேலத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன். சேலம், கோவை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் கட்டமைப்பை ஏற்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மைதானத்தை கட்டமைக்க உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

ஏனென்றால் இனி வரும் காலங்களில் இதுபோன்று புறநகர்ப் பகுதிகளில் இருந்து தான் அதிகளவிலான திறமையான கிரிக்கெட் ஹீரோக்கள் உருவாக உள்ளனர். இதுபோன்று மைதானங்கள் உருவாவதால், அதிகளவிலான இளைஞர்களுக்கு விளையாட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் வலுக்கிறது. விளையாட்டின் மூலம் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது" என்றார். 

இதை தொடர்ந்து, கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்... இந்த அரசு கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து வருகிறது. இதன் மூலம் தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்கி வருகிறது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது" என்றார்.  

 

Trending News