முழு ஊரடங்கை கடைபிடித்து COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்று (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2021, 12:26 PM IST
  • மருத்துவ தேவையைத் தவிர்த்து மக்கள் வேறு காரணங்களுக்காக வெளியே வரக் கூடாது.
  • ஊரடங்கை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
  • கொரோனாவை யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன், பெறவும் மாட்டேன் என்று நாம் அனைவரும் உறுதியேற்போம்
முழு ஊரடங்கை கடைபிடித்து COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம்: முதல்வர் ஸ்டாலின் title=

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளை (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதற்காக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள ஏதுவாக, சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியது. 

அதை அடுத்து, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகளின் விலையும் விண்ணை தொட்டன. காய்கறிகளின் விலை, கிலோவுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்தது.

இதனை அடுத்து, மக்களுக்கு அனைத்து நாட்களும் காயகறி கிடைக்கும் வகையில், முழு ஊரடங்கு நாட்களில் தமிழகம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள மக்கள் 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்;முதலமைச்சர் ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் “ஊரடங்கை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. முந்தைய பொது முடக்கத்தில் வழங்கப்பட்ட தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தியதன் விளைவு தான் தற்போதைய தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு. மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “மருத்துவ தேவையைத் தவிர்த்து மக்கள் வேறு காரணங்களுக்காக வெளியே வரக் கூடாது. கொரோனாவை யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன், பெறவும் மாட்டேன் என்று நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

Trending News