டிவிட்டரில் தமிழிசை லைவ் கமென்ட்ரி!

Last Updated : Jun 4, 2017, 01:53 PM IST
டிவிட்டரில் தமிழிசை லைவ் கமென்ட்ரி! title=

நாட்டில் காவிகள் இருக்கலாம், பாவிகள்தான் இருக்கக் கூடாது’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினையாற்றி உள்ளார்.  

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. இந்த விழாவில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜக-வை கடுமையாக விமர்சித்தார். 

பாஜக நாட்டையே காவிமயமாக்க முயற்சித்து வருகிறது என்று பேசினார். விழாவுக்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் பாஜக-வை விமர்சித்தனர்.

கருணாநிதியின் வைரவிழா நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த போதே விழாவில் பங்குபெற்ற அனைவரையும் விடாமல் விமர்சித்து டிவீட் தட்டி கொண்டிருந்தார் தமிழிசை. 

வைர விழாவுக்கு திமுக பாஜக-வுக்கு அழைப்புவிடுக்கவில்லை. ஆனாலும் வைர விழாவில் பேசிய தலைவர்களின் பேச்சுக்கு டிவிட்டர் மூலம் லைவ்வாக உடனுக்குடன் எதிர்வினையாற்றி வந்துள்ளார் தமிழிசை.

 

 

 

 

Trending News