சென்னை: கொரோனா தொற்றுநோயால் பள்ளிகள் முழு வீச்சில் செயல்படாத நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த கல்வி ஆண்டுக்கான பாடங்கள், அதாவது சிலபஸ் (syllabus) ஏற்கனவே 40% குறைக்கப்பட்டது. இந்நிலையில், கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாததால், இது மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும், பொதுத் தேர்வுகளைக் (Board Exams) கொண்ட 10, 11 மற்றும் 12 வகுப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 10 ஆம் வகுப்பு மாணவர்களை தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக தன்னார்வ அடிப்படையில் வர அனுமதிக்கும் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக மாநில அரசு அறிவித்தபோது, குறைந்த பள்ளி நாட்களுக்கான இழப்பை ஈடுசெய்வதற்கான வழிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிவிக்கவிருந்தது.
"இருப்பினும், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உத்தரவை அரசாங்கம் வாபஸ் பெற்றதோடு, புதிய தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை" என்று பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்டோபரில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும் என்ற அனுமானத்தின் கீழ் குழு அறிக்கை தயாரித்திருந்தது. ஆனால் இப்போது, மீண்டும் திறக்கப்படுவது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதால், அவர்கள் அந்த அறிக்கையை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ALSO READ: COVID உச்சியை நாம் தாண்டி விட்டோமா அல்லது டிசம்பரில்தான் உண்மையான தாண்டவமா!!
"அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்து 40 சதவிகிதம் குறைக்க திட்டமிடப்பட்ட பாடத்திட்டம் 45 சதவிகிதம் குறைக்கப்படலாம்," என்று அவர் கூறினார். இருப்பினும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு இது 40 சதவீதத்திற்கு அப்பால் குறைக்கப்படாது.
"10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வியாண்டின் நீட்டிப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மேலும் வருடாந்திர தேர்வுகளையும் ஒத்திவைப்பது பற்றியும் யோசிக்கப்படுகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.
நீக்கப்பட்ட பாடங்களைக் குறித்து விரைவாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு ஆசிரியர்கள் நன்கு தயார் செய்ய முடியும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்தார்.
"மாற்றப்பட்ட பாடத்திட்டத்தை அறிவிப்பதில் ஏற்படும் தாமதம் ஏற்கனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது," என்று அவர் கூறினார்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப தயாராக இருப்பதால் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, முதன்மை, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்தார்.
ALSO READ: ‘COVID-19 தடுப்பு வருந்து வழங்கலுக்கு தயார் நிலையில் இருக்கவும்’: Centre to States
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR