திராவிட மாடல் எனக்கூறி திராவடத்தையே கொச்சை படுத்தி வருகின்றனர் திமுகவினர் -ஜெயக்குமார்

TN Political News: என் ஸ்டேட்டஸ் வேற, என் ஸ்டேட்டஸ்க்கு தகுதியானவர்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 6, 2022, 03:52 PM IST
  • தாலிக்கு தங்கம் திட்டம் புதுமை பெண் திட்டம் என மாற்றம் செய்துள்ளனர்.
  • ஓபிஎஸ் மகன் ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம்.
  • போரவரவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை.
திராவிட மாடல் எனக்கூறி திராவடத்தையே கொச்சை படுத்தி வருகின்றனர் திமுகவினர் -ஜெயக்குமார் title=

TN Political News: சென்னை ராயபுரத்தில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த கட்சி நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு படத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தற்போது புதுமை பெண் திட்டம் என மாற்றம் செய்துள்ளனர். தாலிக்கு தங்கம் வழங்குவதை கைவிட்டு மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 7ஆயிரம் கோடி மதிப்பில், 7 டன் தங்கம் 14 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு பயனடைத்து உள்ளனர். ஆனால் தற்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் அரசு கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் என மாற்றம் செய்திருப்பது, யானை பசிக்கு சோளப்பொறி போல உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் சமூக நீதி பாதுகாக்க வேண்டும் என்றும் மக்களின், மாணவர்களின் நலனுக்காக பல திட்டம் செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் தற்போது திராவிட மாடல் என்று கூறி, திராவடத்தையே கொச்சை படுத்தி வருகின்றனர் திமுகவினர் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு ஓபிஎஸ் மகன் மனபூர்மவாக வரவேற்பதாக தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயகுமார், இது ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம் என விமர்சித்தார். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ், திமுகவில் சேர்ந்து, ஸ்டாலினுடன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் இணைத்து ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுங்கள் என நகைப்புடன் தெரிவித்தார். 

மேலும் படிக்க: வேலுமணிக்கு எதிரான வழக்கில் கிடுக்குப்பிடி காட்டும் தமிழக அரசு

அதன்பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியின் கருத்து குறித்த கேட்ட கேள்விக்கு, "என் ஸ்டேட்டஸ் வேற, என் ஸ்டேட்டஸ்க்கு தகுதியானவர்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன். ஆனால், புகழேந்தி யாருனு தெரியாதவர். அவரது பேட்டியை பார்ப்பதில்லை. போரவரவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை என காட்டமாக கூறினார். 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார் என தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் பெய்யில் மார்க் வாங்கியுள்ளார். அவருக்கு ஏற்றது, உதயநிதி ரசிகர் மன்றத்தை கவனிக்கும் புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக செயல்பட்டு அதில் தான் அவர் பாஸ் மார்க் வாங்கியுள்ளார் என கிண்டலாக பதில் அளித்தார். மேலும், பள்ளி கல்வி துறை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும் படிக்க: ’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

Trending News