ரூ.200.. அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Prize Money of Rs.200 For Sudent  TN School Education Department Important Circular Sent To Government Schools | அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. மாணவர்களுக்கு ரூ. 200 பரிசு

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 18, 2024, 09:27 AM IST
ரூ.200.. அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி title=

Prize Money of Rs.200 For Sudent: அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக நன்னெறிக் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு முக்கியமான உத்தரவு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது அனைத்து அரசு பள்ளிகளிலும் பிரேயர் டைம்மில் மாணவ - மாணவிகள் திருக்குறளை வாசித்து, அதன் பொருளையும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டு உள்ளது. 

உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறளில் இல்லாத விஷயமே இல்லை. நிறைய நல்ல கருத்துக்கள் உள்ளடக்கிய திருக்குறளை, அனைத்து மாணவ - மாணவிகள் இடையே ரீச் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இந்த முவை எடுத்துள்ளது.

இதனையடுத்து தமிழக அரசுப் பள்ளிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், "பள்ளிகளில் மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி விரிவாக வழங்கப்படும் விதமாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கை மாணவர்களின் வாழ்வியல் நெறிகளை திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருக்குறளின் அறத்துப்பாலும், பொருட்பாலும் உள்ள 105 அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இதில், தினமும் பள்ளி காலை வணக்கக் கூட்டங்களில் திருக்குறளை மாணவர்கள் கூற வேண்டும் என்பதோடு, அதன் பொருளையும் அவர்கள் அறிந்து கூறும் விதமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், மாணவர்கள் வாழ்வியல் நெறிகளை பின்பற்ற திருக்குறளின் பொன்மொழிகளை சிறப்பாக உணர்வதற்கு உதவியாக இருக்கும்.

பள்ளி அளவில் கலை நிகழ்ச்சிகளாக திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட கதை, கவிதை, நாடகம், மற்றும் வினாடி-வினா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் திருக்குறளின் முக்கியத்துவத்தை அடைந்த உணர்வுடன் தேர்ச்சி பெறுவார்கள். 

இதில் 100 குறட்பாக்களை அதிகமாக மனப்பாடம் செய்த மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் இருந்து ரூ.200 பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும்" என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்றுவதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும். 

நன்னெறிக் கல்வியின் பயன்கள் ஆண்டுக்கோடியான மதிப்பீடுகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - புதிய அட்டவணை: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குட் நியூஸ்.,. இனி எல்லா சனி-ஞாயிறு விடுமுறை!

மேலும் படிக்க - புதிய சர்ச்சை? பள்ளிகளுக்கு வந்த சுற்றறிக்கை.. இது ஆபத்தான கொள்கைத் திட்டம் -சி.பி.ஐ(எம் கண்டனம்

மேலும் படிக்க - அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News