சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் பெரிதாக வீழ்ச்சியைக் காண முடியவில்லை.
வியாழனன்று தமிழ்நாட்டில் 35,579 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,34,804 ஐ எட்டியுள்ளது.
இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 397 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,131 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 25,368 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 14,52,283 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,63,390 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6,073 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சென்னையில் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,62,448 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் உயிர் இழந்தனர்.
ALSO READ: கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு
கொரோனா (Coronavirus) சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 97 பேர் இன்று தமிழகத்தில் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 50 வயதுக்கு உட்பட 89 பேர் உயிர் இழந்தனர்.
நேற்று முதன் முறையாக தமிழகத்தின் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 34,000-ஐத் தாண்டியது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு முன்னர் நான்கு நாட்களுக்கு சுமார் 33,000 என்ற அளவில் தொற்றின் எண்ணிக்கை இருந்தது.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் தொற்று எண்ணிக்கை, 35,000-ஐத் தாண்டியுள்ளது பீதியைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, 18 முதல் 44 வரையிலான வயதினருக்கு தமிழ்நாட்டில் இலவசமாக COVID-19 தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை திருப்பூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) வியாழக்கிழமை துவக்கி வைத்தார். 12,000 பணியாளர்களைக் கொண்ட நேதாஜி ஆடை பூங்காவில் இந்த தடுப்பூசி செயல்முறை தொடங்கியது. அனைத்து தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தேன்.
தடுப்பூசியே #COVID19 பெருந்தொற்றை வெல்லும் பேராயுதம்.
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திடும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. அதுவே அரசின் இலக்கு! pic.twitter.com/ysMztTwEQ1
— M.K.Stalin (@mkstalin) May 20, 2021
ALSO READ:
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR