சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கு வருகை தந்தார்.
அவர் மருத்துவமனையின் கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரவு துறை கட்டடத்தில், ஒவ்வொறு நிகழ்ச்சியாக துவக்கி வைத்து விட்டு, கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு, 3ஆவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிப்டில் ஏறினார்.
அவர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லிப்டின் இயக்கம் தடைப்பட்டது. அப்போது அவருடன் மருத்துவர்கள் உள்பட பலரும் இருந்தனர். லிப்ட் நின்றதால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
பின்னர் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் அங்கிருந்த ஊழியர்கள் உயர்ந்த மேஜைக்கொண்டு வந்து, லிப்ட் அருகில் வைத்து லிப்ட் கதவை திறந்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு (MCH), white coat ceremony மற்றும் பல்வேறு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஆகியன தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/9sJZ53aPsj
— Subramanian.Ma (@Subramanian_ma) November 29, 2022
முன்னதாக, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று, இந்தியாவிலேயே முதன் முறையாக கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு (MCH), white coat ceremony மற்றும் பல்வேறு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஆகியன தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | இலங்கையில் 23 தமிழ் மீனவர்கள்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ