குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா வழக்கு: தமிழக அரசு விளக்கம்

kancheepuram Quennesland Land: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யும் வழக்கில், அரசு நிலத்திற்கு மாற்றாக கொடுக்கும் நிலத்தை ஏற்று கொள்ளவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2022, 06:22 PM IST
  • நிறைய பொருட்செலவில் பூங்கா உருவாக்கப்பட்ட குயின்ஸ்லேண்ட்
  • குயின்ஸ்லேண்ட் நில ஆக்ரமிப்பு வழக்கு
  • மாற்று இடத்தை ஏற்றுக் கொள்ள அரசு மறுப்பு
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா வழக்கு: தமிழக அரசு விளக்கம் title=

சென்னை: பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள அரசு நிலத்திற்கு மாற்றாக, தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஏற்றுக்கொள்ளும்படி குயின்ஸ்லேண்ட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பழஞ்சூர் கிராமத்தில் 21 ஏக்கர் அரசு நிலத்தில்  குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யும்படி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாசியர் 2013ம் ஆண்டு அளித்த நோட்டீஸ் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தை நடத்திவரும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தது. குயின்ஸ்லேண்ட் நிலத்திற்கு பதிலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள அதே கிராமத்தில் உள்ள தனியார் பட்டா நிலத்தை மாற்று இடமாக அரசு எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுத்திருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மனு அளித்ததாகவும், அந்த மனு மீது இதுவரை அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | குரங்கம்மை தடுப்பு நடவடிக்கை: தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை

நிறைய பொருட்செலவில் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அதை வேறு இடத்திற்கு மாற்றுவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதால், தங்களது கோரிக்கையை பரிசீலித்து அதே இடத்தை ஒதுக்கவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் தலையிடக் கூடாது என்றும் உத்தாவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார்.

மேலும் படிக்க | குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி: இழப்பீடு 60000 ரூபாயாக உயர்ந்தது

ஏற்கனவே அரசு நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு, தற்போது மாற்று இடம் வழங்குவதை ஏற்க முடியாது என்றும், அவ்வாறு ஏற்றுக்கொண்டால் சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதிப்பது போன்றது என்பதால், மாற்று இடம் அளிக்கும் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து ஜூலை 14ம் தேதி பதிலளிக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அரசின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News