தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் 15, அதாவது அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாபெரும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் இது. இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ஒரு சிறு தவறு கூட நடந்துவிடக்கூடாது. செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஹெச் ராஜா கைது: கொசுவர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
* தகுதி பெற்ற குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், வரவு வைக்கப்பட்டது குறித்து குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
* இதற்கான ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட பயனாளிகளுக்கும், விரைவில் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகளுக்கு பணம் எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிருக்கும் அனுப்பிவைக்கப்படும் குறுஞ்செய்தியில் பணம் எடுப்பது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll Free எண் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு
* 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது
* தேர்வு செய்யப்படாத பயனாளிகளின் கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை என்பதை, சரியான காரணத்தை குறிபிட்டு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும்.
* நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த தொடக்க விழாவில் பணம் கிடைக்காதவர்கள் வந்தால் அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்க ஏற்பாடு
* பயனாளிகள் கொடுக்கும் மனுவை பெற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதியளிக்க வேண்டும். இதற்காக தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
* அரசுக்கும் - வங்கிகளுக்கும், வங்கிகளுக்கும் - மக்களுக்குமான தொடர்பு சீராக இருப்பதை தலைமை செயலாளர்,மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ