சீமான், திருமுருகன் காந்தி டவிட்டர் கணக்குகள் முடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2023, 10:01 AM IST
  • சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்
  • முதலமைச்சர் டிவிட்டரில் கண்டனம்
  • கருத்தியலை கருத்தியலாக எதிர்கொள்ள வலியுறுத்தல்
சீமான், திருமுருகன் காந்தி டவிட்டர் கணக்குகள் முடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் title=

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருக்கிறது. இது ஹேக்கர்களால் அல்லாமல் டிவிட்டர் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இந்த கணக்குகளை முடக்கியுள்ளது. இது கடும் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியினர் தமிழக அரசு தான் இதற்கு காரணம் என கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழக அரசை சமூகவலைதளங்களில் தொடர்ந்து விமர்சிப்பதால் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சமூகவலைதளங்களின் சாடினர்.

மேலும் படிக்க | சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... அதுவும் இந்த காரணத்திற்காகவா?

ஆனால், நாம் தமிழர் கட்சி சார்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தான் சீமான் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு முழு காரணம் என்றும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகனும், இந்தியாவின் ஐடி சட்டத்தை மீறியதற்காக சீமான் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதன் பின்னணியில் தமிழக அரசு இருப்பதாக சந்தேகங்களும், யூகங்களும் பரப்பப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பதிவில், சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!" என கூறியுள்ளார். அவரின் இந்த பதிவுக்குப் பிறகு தமிழக அரசுக்கும், சீமான் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

திமுக ஆதரவு டிவிட்டர் பக்கமான @Surya_BornToWin என்ற பக்கத்தில் சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கான பின்னணி என ஒரு கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், " தமிழ்நாட்டின் பாஜக எதிர்ப்பு வாக்குகளை 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக பெற்றுவிடக்கூடாது என்ற RSS +பாஜக +நாம் தமிழர் கட்சிகளின் அஜண்டா படி,  ஒன்றிய அரசு சீமான் மற்றும் சில நாம் தமிழர் கட்சி ஆட்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு நாம் தமிழர் பாஜகவின் முதன்மை எதிரி போல காட்ட முயற்சிக்கிறார்கள்.. நீங்களே பாருங்களேன்..  இன்னும் ஒரு வாரத்தில் இந்த கணக்குகள் மீண்டும் இயங்கும்.. நாடகம் முடிவுக்கு வரும்!" என எழுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ’அண்ணாமலை சொல்றத நம்பாதீங்க.. அத்தனையும் பொய்’ - எஸ்வி சேகர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News