மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா

Prohibit Online Gambling: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்கிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 22, 2023, 03:28 PM IST
  • தமிழ்நாட்டில் 44 பேர் ஆன்லைன் சூதாட்டத்ததால் தற்கொலை செய்துக்கொண்டனர்.
  • மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
  • சூதாட்டங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம்.
மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா title=

Online Gambling In Tamil Nadu: நாளை மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டம் எனத்தகவல்.

நேற்று மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

அக்டோபர் 19, 2022 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தையும் தடுக்கும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8 ஆம் தேதி விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார். 

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டம்! சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது : மத்திய அரசு

தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தற்கொலை செய்துக்கொண்டனர். இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்தது.

மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம்  கொண்டு வரப்பட்டது. அந்த அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு அக்டோபர் 19 ஆம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். ஐந்து மாதம் கழித்து கடந்த 8 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஆன்லைன் ரம்மிக்கு பிரபலங்கள் கூவுகிறார்கள் - மூத்த நடிகர் காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News