TRB Raja Sworn In As Minister: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரான டிஆர்பி ராஜா, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி பிரமாண உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்து இரண்டாம் ஆண்டு கடந்த மே 7ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த சூழலில், தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, ஸ்டாலின் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் விடுவிக்கப்பட்டு புதிய உறுப்பினர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர் பதவியேற்கும் விழாhttps://t.co/hhMflqQD7u#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TRBRajaa
— TN DIPR (@TNDIPRNEWS) May 11, 2023
பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரான டி.ஆர்.பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவரின் பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா
அங்கு ஆளுநர் ஆர். என். ரவி முன்னிலையில், டிஆர்பி பதவி பிரமாண உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார். பதவியேற்பில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், டிஆர்பி ராஜாவின் தந்தையும், எம்.பி.,யுமான டி.ஆர். பாலு உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்றனர்.
யார் இந்த டிஆர்பி ராஜா
1976ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் பிறந்த டிஆர்பி ராஜா, சென்னை கிறிஸ்துவ பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இவர், சென்னை பல்கலைகழக்கத்தில் உளவியல் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.
2011, 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வானார். இவர் தற்போது திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும், மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவின் அயல்நாடு வாழ் தமிழர் பிரிவின் முதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
கடைசியாக கடந்த டிசம்பரில்...
திமுக ஆட்சியை பிடித்த பின் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எஸ்எஸ் சிவசங்கர், மதிவேந்தன், மெய்யநாதன், பெரியகருப்பன், ஐ. பெரியசாமி ஆகியோருக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டது. சேகர்பாபு, ராமசந்திரன், காந்தி உள்ளிட்டோருக்கு கூடுதல் இலாக்காக்களும் வழங்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இலாக்கா மாற்றம்?
அதன் பின்னர், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. தற்போது டிஆர்பி ராஜாவுக்கு இலாக்காக அறிவிக்கப்படாத நிலையில், அமைச்சரவையில் பல அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், ரகுபதி உள்ளிட்டோருக்கு இலக்கா மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது, டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், விரைவில் அமைச்சரவை இலாக்கா மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ