தமிழக அரசின் 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் (Budget 2021) கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்பு, தாக்கல் செய்யப்படும் இந்த முதல் நிதி அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் வருகிற 13 ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்.
ALSO READ | கோயில்களில் தமிழில் அர்ச்சனை; அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் பொருளாதார சிக்கல் அதிகம் இருக்கும் இந்த நேரத்தில் வருமானத்தைப் பெருக்கும் பல திட்டங்களும் இந்த அறிக்கையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தக் கூட்டத்தில், நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | குடும்ப தலைவிக்கு ரூ.1,000; ரேஷன் கார்டில் பெயர் தேவையா- அமைச்சர் புதிய விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR