Tamilnadu Assembly 2024: இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. அப்பொழுது தேசிய கீதம் இசைக்காததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். 'வாழ்க தமிழ் நாடு, வாழ்க பாரதம்' என ஆளுனர் உரை நிகழ்த்தவில்லை. அரசு தயாரித்த உரையை படிக்காமல் தவிர்த்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசின் உரையில் உள்ள பல விஷயங்களில் நான் முரண்படுகிறேன் எனக்கூறி உரையை படிக்காமல் புறக்கணித்தார். வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என கூறி 2 நிமிடங்களில் உரையை முடித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்
முன்னதாக, ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தேசிய கீதம் புறக்கணிக்கப்படுகிறது -ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தினது உரையில், "தேசிய கீதத்தை பேரவையில் தொடக்கத்திலும் இறுதியிலும் வாசிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்தும் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்து இருக்கக்கூடிய உரையில் பல்வேறு கருத்துக்கள் தனக்கு ஒத்துப் போகாமல் இருப்பதால் அதை வாசித்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும்" எனக் கூறினார்.
மேலும் படிக்க - TN Assembly Session: முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது
2 நிமிடங்களில் உரையை முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக சட்டமன்ற வரலாற்றில் அரசின் உரையை ஆளுநர் புறக்கணிப்பது இது முதல் முறை. வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என கூறி 2 நிமிடங்களில் உரையை முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்தாலும், அவர் தொடர்ந்து அவையிலேயே அமர்ந்திருக்கிறார். அதேநேரத்தில் ஆளுநர் புறக்கணித்த உரையை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த ஆண்டும் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்கிய போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு அளித்த உரையை முழுவதும் படிக்காமல், சிலவற்றை தவிர்த்தார் மற்றும் அவராகவே சில கருத்துக்களை சேர்த்தும் வாசித்தார். இதனால் சட்டமன்றதில் பரபரப்பு ஏற்பட்டது. அவையில் ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதன் காரணமாக கோபமடைந்த, இருந்து ஆளுநர் அவையில் வெளியேறினார்.
மேலும் படிக்க - சட்டப்பேரவையில் தேசிய கீதம் புறகணிப்பு? - உரையை இந்தாண்டும் வாசிக்காத ஆளுநர் ரவி
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் விவரம்
-- அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கி, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
-- சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை 2நிமிடத்திலேயே முடித்துக் கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
-- உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் முரண் படுகிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி
-- வாழ்க தமிழ், வாழ்க பாரதம் என உரையை முடித்துக் கொண்டார் - ஆளுநர்.
-- சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
-- சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணிப்பு.
-- தேசிய கீதத்தை பேரவை தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன் - ஆளுநர்.
-- அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை - ஆளுநர்
-- அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்த நிலையில், உரைக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு படித்து முடித்தார்.
மேலும் படிக்க - ஆளுநரை வரவேற்க வராத கல்லூரி மாணவர்கள்,தேர்வு எழுத முடியாது - ஆடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ