வேளாண் சட்டங்கள் வாபஸ்: இனிப்பு வழங்கிய தமிழக வேளாண்துறை அமைச்சர்

வேளாண் சட்டங்கள் வாபஸ்   பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த தமிழக வேளாண்துறை அமைச்சர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2021, 02:41 PM IST
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்
  • பிரதமர் மோதி அறிவித்தார்
  • வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு தமிழக அமைச்சர்கள் பாராட்டு
வேளாண் சட்டங்கள் வாபஸ்: இனிப்பு வழங்கிய தமிழக வேளாண்துறை அமைச்சர் title=

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக இன்று காலை பிரதமர் மோடி தெரிவித்ததை அடுத்து, தமிழக தமிழக முதல்வர் வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியை சார்ந்த தலைவர்களும் இது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினரும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகளை (DISTRIBUTION OF SWEETS) வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

சேலத்தில் பலவேறு பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று குறைதீர்ப்பு முகாம்களில் மனுக்களை பெறுவதற்காக தமிழக  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

ALSO READ | வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது விவசாயிகளின் ஒற்றுமைக்கான வெற்றி - சீமான் பாராட்டு

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்ற செய்தி வெளியானதை அடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம், சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி அமைச்சர்கள் கொண்டாடினார்கள்.

முன்னதாக பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மத்திய அரசு வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெற்றது (Withdrwal of Farm Laws) மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மை சட்டத்தை எதிர்ப்போம் எனவும்ம் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இன்று  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது, எனவே, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

ALSO READ | மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News