கோடநாடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை நம்ப முடியாது: டிடிவி தினகரன்

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகளை நம்ப முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2019, 07:00 PM IST
கோடநாடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை நம்ப முடியாது: டிடிவி தினகரன் title=

கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்று, அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. 

மேத்யூஸ் ஆவணப்பட வீடியோ நாடு முழுவதும் பெரும் புயலைக்கிளப்பி உள்ளது. மேலும் இச்சம்பவம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. எதிர்கட்சி உட்பட தமிழகத்தின் மற்ற கட்சிகள், இச்சம்பவம் குறித்து விசாரணைகூறிவருகின்றனர். 

இந்தநிலையில், இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும். ஏனென்றால் மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் எந்த ஒரு அமைப்பும் முறையான விசாரணை பயமின்றி மேற்கொள்ளுவார்களா? என்ற கேள்வி எழுகிறது. எனவே நீதிமன்றம் தாமாகவே முன்வந்து தன் கட்டுபாட்டில் இந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News