ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித், கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. அருகில் ஒரு மீட்டர் விட்ட ஆழ்துளையிட்டு காப்பாற்றும் முயற்சியும், கடினமான பாறைகள் இருந்ததால் தாமதப்பட்டது. சுமார் 80 மணி நேர போராட்டத்திற்குப் பின் சுஜித், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது.
இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு பதிவிட்டுள்ள முகநூல் பதிவில்; "ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்பதற்கான ஹேக்கத்தான் வைத்திருக்க ஐ.டி துறை முன்மொழிகிறது.... எங்களிடம் அந்த கருவி இல்லை என்பதால் நான் குற்றவாளியாக உணர்கிறேன்... ஆழ்துளை கிணறு, சுரங்கங்களில் விழும் குழந்தைகளை மீட்க உதவும் சிறந்த கருவியை உருவாக்கினால் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்க திட்டமிட்டுள்ளோம். தனிநபர், புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் என யார் உதவினாலும் பரிசுத் தொகை வழங்கப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அட்சரேகை-தீர்க்கரேகை கைப்பற்றப்பட்டு ஒரு வலைத்தளத்திலோ அல்லது மூச்சுக்குழாய் போன்ற வெளிநாட்டு உடல்களை அகற்றக்கூடிய ஒரு மூச்சுக்குழாய் போன்ற ஒரு சாதனத்திலோ போர்வெல்லைத் துளையிடுவதற்கான அனுமதி மட்டத்தில் தீர்வு இருக்கக்கூடும் என்று அவர் கூறினார். ஆழ்துளை குழாயில் குழந்தை சிக்கியவுடன், குழந்தையைச் சுற்றி கூடாரங்களை வைத்து, அவரை / அவளை அழைத்துச் செல்லலாம், இது டா வின்சி ரோபோடிக் கையைப் போன்றது என்றார்.
மேலும், இந்த தீபாவளி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் மீண்டும் விலைமதிப்பற்ற ஒரு உயிரை இழந்துவிட்டோம். இதுவே இந்தியாவில் உயிரிழந்த கடைசி குழந்தையாக இருக்கவேண்டும் என்றார்.