UKG படிக்கும் சிறுவனுக்கு இப்படியொரு திறமையா - என்னென்ன செய்கிறான் பாருங்கள் !

UKG படிக்கும் சிறுவனுக்கு இப்படியொரு திறமையா - என்னென்ன செய்கிறான் பாருங்கள் ! 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 12, 2022, 10:38 AM IST
  • யுகேஜி மாணவரின் அசாத்திய திறமை
  • 800 வார்த்தைகளை தெரிந்து வைத்து அசத்தல்
  • சாதனை புத்தகத்தில் சிறுவனுக்கு சிறப்பு இடம்
UKG படிக்கும் சிறுவனுக்கு இப்படியொரு திறமையா - என்னென்ன செய்கிறான் பாருங்கள் !  title=

திருச்செங்கோடு அருகே உள்ள சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் - மனோன்மணி தம்பதி. நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது ஒரே மகன் தக்ஷன். தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். 

படிப்பில் சுட்டியாக இருக்கும் சிறுவன் தற்போதே தனது சாதனை கணக்கை தொடங்கி விட்டார். ஆங்கிலத்தில் ‘ஏ என்றால் ஏ பார் ஆப்பிள் ; பி என்றால் பி பார் பால்' வார்த்தைகளை போல ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துக்களுக்கும் குறைந்தது பத்து வார்த்தைகளாவது சொல்லி அசத்துகிறார். 

யுகேஜி படிக்கும் சிறுவன்

அதே போல் தமிழில் ’அ என்றால் அம்மா என்று சொல்வது போல’ ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் குறைந்தது 15 வார்த்தைகளாவது வேகமாக சொல்லி அசத்துகிறார். மேலும், 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள் 20 உடல் பாகங்கள் காய்கறிகள்25, பழங்கள் 35, என சுமார் 800 வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளார். 

இந்நிலையில் சிறுவன் தக்ஷனின் சாதனைகளை அங்கீகரித்து ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்’ புத்தகத்தில், ’ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ்’ என்ற பட்டியலில் சிறுவனுக்கு சிறப்பு இடம் கொடுத்துள்ளனர். மேலும் பியூட்சர்கலாம் புக் ஆப் ரிகார்டிலும் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து சிறுவனின் அசாத்திய திறமையை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். சிறுவனின் திறனை கண்டறிந்து சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சித்தது குறித்து சிறுவனின் தாயார் மணோன்மணி கூறியதாவது, ராக்கெட் விண்வெளி குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் எங்கள் மகனை அவர் விரும்பும் துறையில் படிக்க வைப்போம். 

மேலும் படிக்க | ஒரே மேடையில் 38 மணப்பெண்களுக்கு அலங்காரம் - உலக சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள்

சாதனை குறித்து செய்திகளை பார்த்த எனது மகன் தானும் இத போல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறியதை அடுத்து அவரை நெறிப்படுத்தி ஊக்குவித்து வழிகாட்டினோம் என கூறினார். 

மேலும் படிக்க | திமுக அரசை வசமாக ஏமாற்றிய அதிமுக நிர்வாகி! இடையில் ஒரு வங்கிமோசடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News