தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் முடிவு குடும்பத்தினரையும்,அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2021, 02:29 PM IST
தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி! title=

கன்னியாகுமரி : இந்த காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் எதற்கெடுத்தாலும் மனமுடைந்து தற்கொலை செய்யும் முடிவையே ஒரு ஆயுதமாக எடுக்கின்றனர். சமீபத்தில் கூட ஒரு ஆய்வறிக்கையின்படி அதிகபட்சம் குழந்தைகள் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.  இதேபோன்று தான் ஒரு சாதாரண விஷயத்திற்கு பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையின் பூட்டேற்றி தொழிகோடு என்ற பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு ஆரதி, வீணா என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஆரதி லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இவரின் இரண்டாவது மகள் வீணா அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஐயப்பன் தனது மூத்த மகள் ஆரதிக்கு படிப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்திருக்கிறார்.

ALSO READ 10-ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 35 வயது பெண்! போக்சோ சட்டத்தில் கைது!

அதனையடுத்து,பத்தாம் வகுப்பு படிக்கும் வீணா தனக்கும் செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த ஐயப்பன் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை முடித்த பிறகு வாங்கி தருகிறேன்,இப்போது படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துமாறு மகள் வீணாவிடம் கூறியுள்ளார்.  மேலும் தந்தையின் நிராகரிப்பால் வீணா மன வேதனையுற்று ,வீட்டில் இருப்பவரா யாருடனும் பேசாமல் சோகமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மன வேதனையிலிருந்த வீணா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ,வீட்டிற்குள் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து அருந்திவிட்டார். 

இதனையடுத்து பூச்சி மருந்தின் வீரியத்தால் வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்துவிட்டார்.பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து  உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனை தொடர்ந்து,அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில்,மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.ஆனால் அங்கு வீணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மருத்துவமனையிலுள்ள மாணவி வீணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவியின் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,தற்கொலைக்கான காரணம் என்னவென்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவியின் இந்த முடிவு குடும்பத்தினரையும்,அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News