போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கபட்டுள்ளதாக தமிழக உள்துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து இன்றும் இரண்டு முறை காவல் துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், போராட்டம் தொடர்பாக தவறான வதந்திகள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க அப்பகுதியில் இணையதள சேவையை முடக்கியுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது தமிழக உள்துறை.