ஆதிச்சநல்லுரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை: FM நிர்மலா சீதாராமன்

தமிழகத்தின் ஆதிச்சநல்லுரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Last Updated : Feb 1, 2020, 03:24 PM IST
ஆதிச்சநல்லுரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை: FM நிர்மலா சீதாராமன் title=

தமிழகத்தின் ஆதிச்சநல்லுரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது.,

தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரத்திலிருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. 

ஆதிச்சநால்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.

> ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
> குதிரைகளை பயன்படுத்த கற்றிருந்தனர்.
> இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.
> முருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.
> கொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.
ஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் > அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.
> ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.

Trending News