இலங்கைக்கு அனுப்ப அரிசி, பருப்பு, மருந்து தயார்! மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு தகவல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2022, 08:19 PM IST
  • தமிழக முதல்வர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசினார்.
  • அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயார்.
இலங்கைக்கு அனுப்ப அரிசி, பருப்பு, மருந்து தயார்! மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு தகவல் title=

அப்போது அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

முதல்வரும் வெளியுறவுதுறை அமைச்சரும் பேசியவற்றை திமுக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, இன்று (7-4-2022) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார்.

மேலும் படிக்க |  தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு

அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது கொண்டிருக்கும். இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் வசிக்கும். 

Srilanka Crisis - DC

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளது.

மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க |  தொடக்கப்பள்ளி மாணவர்களின் அவலநிலை; 15 ஆண்டுகளாக மதிய உணவு கிடைக்கவில்லை

இதுதொடர்பாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவு கூர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை மாண்டிங்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் உறுதி அளித்தார்.

என்று குறிப்பிடப்பட்டது.

மேலும் படிக்க |  பணியில் நீடிக்கத் தகுதியில்லை; ஊதிய உயர்வு பெற உரிமையில்லை: ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News