இஸ்லாம் மதத்திற்கு மாறிய T.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்!

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தனது தந்தை, தாய் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!

Last Updated : Feb 16, 2019, 03:48 PM IST
இஸ்லாம் மதத்திற்கு மாறிய T.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்!  title=

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தனது தந்தை, தாய் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். நடிகர் சிலம்பரசன் தனது தந்தையைப் போன்றே தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார்.

அவரது இரண்டாவது மகனான குறளரசன் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகினார். தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். சிலம்பரசனின் சகோதரி இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது.

இந்தநிலையில் தாய் உஷா, தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் அவர் இஸ்லாமிய முறைப்படி மதம் மாறுவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து டி.ராஜேந்தர் கூறுகையில், “எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவன் நான். அதனால் குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாத்தை தழுவ தடை சொல்லவில்லை" என்றார்.

இயக்குநர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வரும் நிலையில் குறளரசன் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவதும் குறிப்பிடத்தக்கது! 

 

Trending News