சென்னை: அலந்தூரைச் சேர்ந்த கே எஸ் அதிகேசவன் (KS Athikesavan) வயது 74 கில்பாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (Kilpauk Medical College Hospital) இருந்து காணாமல் போய் 22 நாட்களாகி விட்டது. கடைசியாக அவரது குடும்பத்தினர் அவரை ஜூன் 11 அன்று கிண்டியில் உள்ள ஒரு கொரோனா சோதனைக்கு (Corona Screening Centre) மையத்தில், அவருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட பின்னர், 108 ஆம்புலன்சில் கே.எம்.சி மருத்துவமனைக்கும் (KMCH) அழைத்துச் சென்றனர்.
அவருடன் குடும்ப உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவர் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவார் என்று கார்ப்பரேஷன் சானிட்டரி இன்ஸ்பெக்டர் அவரது மனைவிக்கு உறுதியளித்தார். இருப்பினும், மூன்று நாட்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதேநேரத்தில் அவருடன் சென்ற மற்றவர்கள் வீடு திரும்பினார்கள். இதை அறிந்த குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்தனர். உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அத்தகைய நபர் அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டது.
இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, அந்த நபரைத் தேட குடிமை அமைப்பு (Civic Body) ஒரு குழுவை அமைத்துள்ளது. அவரது உருவ படத்துடன் காணாமல் போன சுவரொட்டிகளை நகரம் முழுவதும் குடும்பத்தினர் ஒட்டியுள்ளனர்.
பிற செய்தி | கொரோனாவால் மணமகன் மரணம்...திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
"அவர் எங்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஒரு நோயாளி பற்றி தெரியாது என மருத்துவமனை எவ்வாறு கூற முடியும்" என்று அவரது மகன் மணிவண்ணன் வேதனையுடன் தனது ஆதங்கத்தை முன்வைத்தார்.
அதிகேசவனின் தாயாருக்கு கோவிட் 1-9 (COVID-19) தொற்று இருந்ததால் ஜூன் 3 அன்று, காலமானார். அதன்பிறகு அதிகேசவனுக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர் தனது பகுதியில் உள்ள சோதனை முகாமுக்கு அசென்று பரிசோதனை செய்துக்கொண்டார். ஜூன் 9 அன்று, அவர் பரிசோதிக்கப்பட்டார் மற்றும் ஜூன் 10 அன்று, அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜூன் 11 காலை 9.30 மணியளவில், ஆம்புலன்ஸ் மூலம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்தனர். அவரை கிண்டியில் (Guindy) உள்ள ஒரு சோதனை மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். சோதனை செய்யப்பட்ட பின்னர், அவரை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் (KMC Hospital) அனுமதிக்க வேண்டும் கூறியுள்ளனர்.
பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை அழைத்து சென்ற டிரைவர் மருத்துவமனையில் இறக்கிவிட்டார். வழக்கமாக, ஓட்டுநர் தான் நோயாளியை அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரது பெயர் பதிவேட்டில் இல்லை.
கிண்டி சோதனை மையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் (CCTV Footage) அவர் ஆம்புலன்சில் ஏறுவதைக் காட்டுகின்றன. காவல்துறையினருடன் குடிமை அமைப்பும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
பிற செய்தி | ஆடுகளுக்கு பரவும் கொரோனா.... கர்நாடகாவில் தனிமை படுத்தபட்ட 50 ஆடுகள்..!