ஷவர்மா பிரச்சனை கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் தலைத்தூக்கியுள்ளது. கேரளாவில் அண்மையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலும் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து, ஷவர்மா பிரச்சனை தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. இதனால், தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். சட்டப்பேரவையிலும் ஷவர்மா பிரச்சனை எதிரொலித்தது.
மேலும் படிக்க | தமிழக 'ஷவர்மா' கடைகளுக்கு ஆப்பு! கேரள மாணவி மரணத்தின் எதிரோலி!
இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஷவர்மாவில், நாள்பட்ட இறைச்சி, சரியான உணவுப்பதப்படுத்துதல் இல்லை என்றால் அனைவரின் உடல்நலமும் பாதிப்படையும் என்றார். உரிய விதிகளைப் பின்பற்றி ஷவர்மா கடைகள் இயங்குகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். தற்போது ஷவர்மா பிரச்சனை மாமன்ற கூட்டங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர்மன்ற அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நகரமன்ற கூட்டத்தில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவிற்கு கௌவுண்டண்யா ஆற்றில் தற்காலிக கடைகளை அமைக்க அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து நகர்மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஷவர்மா குறித்தும் அவைக்கூட்டத்தில் பேசப்பட்டது. அதில், சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், அதுதொடர்பான செய்திகளில் அதிகளவில் வருவதால் குடியாத்தம் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, அனைத்து ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளிலும் ஆய்வு செய்யுமாறு குடியாத்தம் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் உத்தரவிடப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து ஷவர்மா பிரச்சனையை மாமன்ற உறுப்பினர்கள் தீவிரம் காட்டிப் பேசியதால் குடியாத்தம் பகுதியில் இனி ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்குத் தடையா?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
இது குறித்து குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளதாவது, ‘பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஷவர்மாவால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உடலுக்கு தீங்கு ஏற்படும் சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மா மட்டும் குடியாத்தம் நகராட்சியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்யுப் கடைகள் கண்டறிப்பட்டால் உடனடியாக அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR