மூதாட்டியை ஏமாற்றி 100 சவரன் நகை, 3 லட்சம் ரொக்கத்துடன் ஓட்டம் பிடித்த வேலைக்காரன்

72 வயது மூதாட்டி வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் 100 சவரன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் தப்பி ஓடியதால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2023, 02:56 PM IST
  • மூதாட்டியை ஏமாற்றிய வேலைக்காரன்
  • வீட்டில் இருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை
  • அடையாறு காவல் நிலையத்தில் புகார்
மூதாட்டியை ஏமாற்றி 100 சவரன் நகை, 3 லட்சம் ரொக்கத்துடன் ஓட்டம் பிடித்த வேலைக்காரன் title=

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் கனகராஜ். இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மயக்கவியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி ஞானமணி சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் 5வது குறுக்குத் தெருவில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு வாரிசு இல்லை. மருத்துவர் கனகராஜும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். அதன் பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்த ஞானமணி இரவு நேரத்தில் மட்டும் தனது சகோதரனின் மகனை அழைத்து பாதுகாப்புக்காக தங்க வைத்துள்ளார். 

மேலும் படிக்க | கொச்சியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது...?

கனகராஜின் தூரத்து உறவினரான கனக சண்முகம் என்பவரை கடலூரில் இருந்து அழைத்து வந்து வீட்டில் வேலை செய்ய பணியமர்த்தி இருக்கிறார்கள். அவர் அனைத்து வேலைகளையும் கவனித்து வந்துள்ளார். மூதாட்டி ஞானமணி வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பென்ஷன் வாங்குவதற்கான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் என ஒட்டுமொத்த பொருட்களையும் ஒரு டிராவல் பேக்கில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இந்த நிலையில், கனக சண்முகம், கனகராஜ் இறந்தவுடன் வீட்டில் தனியாக இருந்து வந்த ஞானமணியை ஏமாற்றி வீட்டில் இருந்த ட்ராவல் பேக் மட்டுமில்லாமல் மற்ற பொருட்கள் அடங்கிய மூன்று ட்ராவல் பேகை எடுத்துச் சென்றுள்ளார்.

அதில் 100 சவரன் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் இருந்துள்ளது. இதனை அறிந்த மூதாட்டி ஞானமணி அதிர்ச்சியடைந்ததுடன் முதலில் நேரடியாக கனக சண்முகத்தை தொலைபேசியில் அழைத்து விவரத்தைக் கேட்டுள்ளார். முதலில் எதனையும் எடுக்கவில்லை எனக் கூறிய அவர், பின்னர் மிரட்ட தொடங்கியுள்ளார். சிபிஐ- யிடம் கூட சென்று புகார் அளித்துக் கொள், எனக்கு எந்த பயமும் இல்லை என மிரட்டியுள்ளார். இதில் அச்சமடைந்த மூதாட்டி ஞானமணி, வேறு வழியில்லாமல் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கனக சண்முகத்தை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | இளைஞரின் உயிரைப்பறித்த ஆன்லைன் ரம்மி! கடனை திருப்பி தரமுடியாமல் விஷம் குடித்த சோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News